இலங்கை

களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் 2 பிள்ளைகளின் தந்தை பலி

களுத்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹா வஸ்கவைப் பகுதியில் நேற்று (29) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாணந்துறை சரிக்காமுல்லை பகுதியில் வசிக்கும் 47 வயதான ஒருவரே பலியாகியுள்ளார்.

குறித்த நபர் களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் பின்னால் வந்த கனரக வாகனம் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கனரக வாகன சாரதி களுத்துறை வடக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் இன்று (30) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.