இலங்கை

களுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீரோட்டம் ஜனாதிபதி தலைமையில்..…..

 

 

21ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நீர்ப்பாசன புரட்சியாக கருதப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீரினை சுபவேளையில் திறந்துவிடும் மங்கள நீரோட்டம் மற்றும் புதிய அம்பன நகரத்தை மக்களிடம் கையளித்தல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது.

இன்று முற்பகல் இடம்பெற்ற சுபவேளையில் களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீர் ஜனாதிபதியினால் திறந்துவிடப்பட்டது.

மத்திய மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசந்த பெரேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் டி.எம்.எஸ்.திசாநாயக்க, மொரகஹகந்த செயற்திட்டத்தின் பணிப்பாளர் டப்ளி.டி.விஜயரத்ன உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்