Breaking News

களனி பல்கலைக்கழகத்தின் பீடங்கள் அனைத்தும், திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

காலவரையறை இன்றி மூடப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் பீடங்கள் அனைத்தும், வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக பாதுகாப்புக்கு கெடுபிடிகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தநிலையில், மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மூடப்பட்டிருந்தன.
தற்போது இந்த விடயத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகம் மீளத் திறக்கப்படுவதாக பல்கலைக்கழகத்தில் தகவல் மற்றும் ஊடகப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட விரிவுரையாளர், விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.