இலங்கை

களனி கங்கையில் நீராடச் சென்ற எட்டியாந்தோட்டை யுவதி சடலமாக மீட்பு

 

எட்டியாந்தோட்டை மீகஹவெல்ல பகுதியில் உள்ள யுவதி ஒருவர்
களனி கங்கைகையில் நீராட சென்று காணாமல் போன நிலையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிஅளவில் நீராடுவதற்காக எட்டியாந்தோட்டை களனி கங்கைக்கு சென்ற யுவதி, நிரில் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும் களனி கங்கையில் கானாமல் போன யுவதியினை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பிரதேச மக்களும் இனைந்து ஈடுபட்டபோதிலும் யுவதியின் உடல் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை கொழும்பில் இருந்து கடற்படடையினர் வரவழைக்கப்பட்டு களனி கங்கையில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டபோதே குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் குறிப்பிட்டனர்.

எட்டியாந்தோட்டை மீகஹவெல்ல பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஜோன் ஞானமேரி என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.