Breaking News

கல்முனை அரச அலுவலகத்தில் புகுந்த மலைப்பாம்பு !

அரச அலுவலகம் ஒன்றில் புகுந்த பாம்பு ஒன்று கொல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகத்தின் பின்புறமாக மலைப்பாம்பு போன்ற தோற்றம் கொண்ட பாம்பு திடீரென உட்புகுந்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை(7) மதியம் குறித்த அலுவலகத்திற்குள் உட்புகுந்த சுமார் 7 அடி கொண்ட பாம்பினால் அவ்வலுவலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் அல்லோலகல்லோலப்பட்டனர்.

பின்னர் பாதுகாப்பு காரணம் கருதி குறித்த பாம்பு அடித்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-