Breaking News

கல்முனையில் நாளைமுதல் முஸ்லிம்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் !

 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் உண்ணாவிரத போராட்டத்தை நாளை காலை ஆரம்பிப்பதென கல்முனை முஸ்லிம்கள் முடிவெடுத்துள்ளனர்.

நாளை(20) கல்முனை பொலிஸ் நிலைய வீதியில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கிறது.

இதேவேளை கல்முனை மாநகரசபை வளாகத்தில் இன்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மாநகரசபை முஸ்லிம் உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், வர்த்தக சமூகத்தினர் கலந்துகொண்ட கூட்டத்தின் முடிவில், கல்முனையை தரமுயர்த்தக் கோரி நடத்தப்படும் போராட்டத்திற்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.இதன்படி, தற்போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தற்போது நடக்கும் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தால் பொதுப்போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுவதாகவும் அவசரகால சட்ட விதிகளுக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.