இலங்கை

கல்முனையில் தொடரும் ஊரடங்கு – ஆயுதங்கள் மீட்பு – முப்படை தீவிர தேடுதல் ! (படங்கள் இணைப்பு )

நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்ட போதும் கல்முனை ,சவளக்கடை ,சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத்திட்ட பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் அருகில் உள்ள மைதானம் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள படையினர் அதன் பின்னர் தீவிர சோதனைகளை நடத்த தீர்மனைத்துள்ளதாக தகவல் .

நேற்றைய தாக்குதல் நடத்தியவர்கள் காத்தான்குடி பகுதியில் இருந்து சாய்ந்தமருது பகுதிக்கு வந்தவர்கள் என சொல்லப்படுகிறது.மக்கள் வழங்கிய தகவல் ஒன்றையடுத்து அங்கு பொலிஸார் சோதனையிட சென்றபோதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படும் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதகவும் மேலும் மூன்று பேர் காயங்களுடன் இருப்பதாகவும் பொலிஸ் தகவல்கள் சொல்கின்றன.

இப்போது கிடைத்த தகவல்களின்படி சுமார் எட்டுப் பேரின் உடல்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஜிஹாத் தொடர்பான புத்தகங்கள் ,பெருமளவான பணம் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சாய்ந்தமருது சம்பவத்தின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன (நன்றி – விடியல் இணையத்தளம் ).