Breaking News

கல்முனையில் சர்வமதத் தலைவர்கள் உண்ணாவிரதம்

 

 

 

 

 

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சர்வமத தலைவர்கள் குறித்த உப செயலகம் முன்பாக உண்ணாவிரதம் ஆரம்பித்து உள்ளனர்.

கல்முனை விகாராதிபதி ,கிழக்கு மாகாண இந்து குருமார் சங்க தலைவர் ,கிறஸ்தவ போதகர் ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளனர்

சுமார் 29 கிராம சேவையாளர் பிரிவை கொண்ட இவ் உப செயலகம் அரசியல் காரணங்களுக்காக தரமுயர்வு தடுக்கப்பட்டு கடந்த 30 வருடங்களாக உப செயலகமாகவே இயங்கி வருவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவோர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ராஜன், விஜயரெட்னம் ஆகியோரும் இந்த போராட்டத்தில் இணைந்து உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.