Breaking News

கல்முனையில் களமிறங்கினார் கருணா !

 

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் சென்றனர். கடந்த இரண்டு தினங்களை விடவும் இன்று அதிக மதகுருமார், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.