இலங்கை

கலாசார சீரழிவை வெளிப்படுத்திய சர்ச்சைக்குரிய விளம்பரம் !

சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள விளம்பரம் ஒன்று குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

நாட்டின் கலாசாரம் மோசமடைந்து வரும் ஒரு நிலைமையை அந்த விளம்பரம் கோடிட்டுக் காட்டுவதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

புதுவருடத்தை முன்னிட்டு கிரிபத்கொடையில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லம் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

”விடுமுறையை சுதந்திரமாகக் கழியுங்கள் .உங்கள் அன்பு பெற்றோரை பாதுகாப்புடன் வைத்திருப்போம்.சுத்தமான உணவு குடி வகைகள் மற்றும் வசதியான அறைகள் உள்ளன ” என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதுவருட காலத்தில் பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விட்டு சந்தோஷத்தை அனுபவிக்கும் அளவிற்கா நாட்டின் கலாசார நிலைமை சீரழிந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலையுடன் கேள்வியெழுப்பியுள்ளனர் .