Breaking News

கற்குகையில் கசிப்பு தயாரித்த இருவர் கைது

 

-நோட்டன்பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

சூட்சுமமான முறையில் கற்குகைக்குள் கசிப்பு தயாரித்து விற்பனை செய்து வந்த இருவரை அட்டன் பொலிஸ் பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கினிகத்தேன ,பொல்பிட்டிய, கொஸ்வத்த பகுதியிலே நேற்றுமாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கசிப்பு மற்றும் தயாரிப்புக்கு பயன்படுத்திய உபகணங்களும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இருவரும் கினிகத்தேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களை அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.