உலகம்

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி

 

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் தனது முதலமைச்சர் பதவியை குமாரசாமி- கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா செய்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை குமாரசாமி வழங்கினார். கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்தார்.

புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக குமாரசாமி தொடர வேண்டும் என்றும், நிர்வாக ரீதியாக எந்த முடிவுகளும் எடுக்க கூடாது எனவும் குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில் நாளை கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் பாஜக ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.