உலகம்

கருந்துளையை படம்பிடித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை !

முதன்முறையாக கருந்துளையை (Black Hole) படம் பிடித்து சாதனை படைத்துள்ளனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

பூமியில் இருந்து இருந்து 500 மில்லியன் ட்ரில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் இந்த கருந்துளை இருக்கிறது.

இதன் சுற்றளவு 40 பில்லியன் கிலோமீற்றர்களாகும்.

அதாவது உலகத்தை விட 3 மில்லியன் மடங்குகள் பெரியது.

பூமியில் உள்ள 8 தொலைகாட்டிகளின் வலையமைப்பின் ஊடாக இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“எதைக் காண முடியாதென யோசித்தோமோ அதனை கண்டிருக்கிறோம்” என்று Event Horizon Telescope Collaboration எனப்படும் EHT தொலைக்காட்டி அமைப்பின் பணிப்பாளர் ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார்.

இதில் சுமார் 200 ஆராய்ச்சியாளர்கள் பங்குபற்றினர்.