உலகம்

கருக்கலைப்பை எதிர்த்து அலபாமாவில் சட்டம் நிறைவேற்றம்

 

கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் மிகவும் இறுக்கமான சட்டத்தை அமெரிக்காவின் அலபாமா மாநில செனட் நிறைவேற்றியுள்ளது.

இதுதொடர்பாக மாநில செனட்சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த சட்டமூலத்துக்கு 25 வாக்குகள் ஆதரவாக கிடைத்ததுடன், 6 வாக்குகள் எதிராக வழங்கப்பட்டன.

ஏற்கனவே இந்த சட்டமூலம் அலபாமாவின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

தற்போது மாநில ஆளுனர் கே ஐவேயிடம் அத்தாட்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர் கருக்கலைப்புக்கு எதிரான போக்குவடையவர் என்பதால், சட்ட மூலத்தில் அவர் கைச்சாத்திடுவார் என்று அங்கீகரிக்கப்படுகிறது.