உலகம்

கம்போடிய கட்டிட சரிவு – 2 நாட்களின் பின்னர் இருவர் உயிருடன் மீட்பு

 

கம்போடியாவில் சீனாவிற்கு சொந்தமான கட்டுமான தொகுதி ஒன்று கடந்த சனிக்கிழமை இடிந்து வீழ்ந்தது.

இதில் 25 பேர் பலியாகியதுடன் அதே எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தனர்.

மீட்பு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், இன்று இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கட்டிட சிதைவுகளுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.