இலங்கை

கம்பளையில் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (06) மாலை போதைப் பொருள் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 40 இற்க்கு மேற்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் பொதி செய்ய வைத்திருந்த கேரள கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்..

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த சந்தேகநபர்கள் நீண்ட நாட்களாக இரகசியமாக கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.