உலகம்

கமல்ஹாசனுக்கு எதிராக ‘பகைமை தூண்டல்’ வழக்கு

இந்தியாவில் பகைமை உணர்வைத் தூண்டியதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மீது கரூர் காவற்துறை நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை ஆவரக்குறிச்சியில் வைத்து, ‘சுதந்திர இந்தியாவின் முதலாவது தீவிரவாதி இந்து’ என்றும், ‘அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்றும் கமல்ஹாசன் கூறி இருந்தார்.
கோட்சே, மஹாத்மா காந்தியை கொலை செய்தவராவார்.
இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதனை அடுத்து இந்து முன்னணியினால் கரூர் காவற்துறை நிலையத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக காவற்துறையினர் ‘பகைமை தூண்டல்’ வழக்கை பதிவு செய்துள்ளனர்.