உலகம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஓதுக்கீடு

தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ‘டார்ச் லைட்’ சின்னத்தை  ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் இந்த தகவல் இன்று வெளியாகியுள்ளது.

வாரிசு அரசியல் கூடாது, ஏழைகளை அரசியல்வாதிகள் ஏழைகளாகவே வைத்துள்ளனர், அதுதான் அவர்களின் வெற்றிக்கான சாவியாக இருக்கிறது என கமல் தெரிவித்திருந்தார்.

தனக்குப்பின் தன் மகனோ, மகளோ, மைத்துனரோ வருவார்கள் என்ற அரசியல் கூடாது. நான் தமிழன் என்று வாய்ப்பு கேட்காதீர்கள். தகுதியை வைத்து வாக்கு கேளுங்கள். தமிழர்கள் என்பது விலாசம். திறமை இல்லாத தமிழனுக்கு எல்லா வாய்ப்பையும் அளிக்க வேண்டும் என்பது இல்லை. திறமை உள்ள தமிழனுக்கே வாய்ப்பு என்றார்.