இலங்கை

கனடா செல்லவிருந்த மைத்ரி – ரணிலின் டிப்ளொமசியால் தடைப்பட்டது !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் 29 ஆம் திகதி கனடாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்தார். ஆனால் அந்த பயணம் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது .

மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள அவர் ஒட்டாவா செல்லவிருந்தார்.ஆனால் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ருடோவை சந்திக்க நேரம் கிடைக்காத காரணத்தினால் இந்த பயணத்தையே மைத்ரி நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.

கனேடிய பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்காததன் பின்னணியில் பிரதமர் ரணில் இருக்கலாமென ஜனாதிபதி தரப்பு கருதுகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் – மைத்ரி சீனாவுடன் நெருக்கமாக செயற்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் மேற்குலக நாடுகளுக்கு பிரதமர் ரணில் தரப்பு வழங்கும் அழுத்தங்களின் ஒரு அம்சமாகவே இந்த செயற்பாடு இடம்பெற்றிருக்கலாமென ஜனாதிபதி தரப்பு கருதுவதாக அறியமுடிந்தது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே இருப்பதால் அவரை சந்திப்பதில் பெரிதும் பயன் ஏற்படப்போவதில்லை என்ற தகவலை இராஜதந்திர ரீதியாக பிரதமர் தரப்பு வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கூறிவருவது தொடர்பிலும் ஜனாதிபதி தரப்பு கடும் விசனம் கொண்டுள்ளது.