உலகம்

கனடாவும் அமெரிக்காவும் இணக்கப்பாட்டில்

அலுமினியம் மற்றும் இரும்பு இறக்குமதி தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
இதன்கீழ் கனடாவிற்கு இதுவரையில் விதித்துவந்த அதீத வரியை அமெரிக்கா நீக்கியுள்ளது.
இந்த முன்னேற்றமானது புதிய அமெரிக்க வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கான சாதகமான சூழ்நிலையை தோற்றுவித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் மெக்சிகோவும் அமெரிக்காவும் விரைவில் இதேபோன்ற அறிவிப்பை வெளியிடவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு அமெரிக்கா இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதான அதீத வரியை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.