இலங்கை

கந்தப்பளை கோயில் முன்றலில் விகாரையமைக்கப்படமாட்டாது -அரசு கூட்டத்தில் தீர்மானம்

 

கந்தப்பளை கோர்ட்லோஜ் முனிசாமி ஆலய முன்றலில் புத்த விகாரை அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என நுவரலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிிறைவேற்றப்பட்டுள்ளது

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று நுவரெலியாவில் இடம்பெற்றபோது
குழுவின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் எழுத்து மூலம் சமர்ப்பித்த கோரிக்கையினை விசேட அபிவிருத்தி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் வழிமொழிந்தார்.

அப்போது கந்தப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என உறுதி அளித்தார். அதேபோல நுவரெலியா பிரதேச செயலாளரும் தமக்கு இத்தகைய விகாரை அமைப்பது தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகளின்போது பிரதேச செயலாளருக்கே உரிய அதிகாரம் இருப்பதாகவும் எனவே அவரின் அனுமதி இல்லாத எந்தவொரு மத நிறுவன அமைப்புக்கும் அனுமதி இல்லை என்றும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா