இலங்கை

கத்தோலிக்க பாடசாலைகள் 14 ஆம் திகதி ஆரம்பமாகலாம் – பேராயர் தகவல் !

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் சீரானால் எதிர்வரும் 14 ஆம் திகதி கத்தோலிக்க பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அப்படி பாதுகாப்பு சீராகாமல் போனால் வெசாக் முடிந்த பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

இன்று ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட பேராயர் , திடீரென வசதி படைத்தவர்களாக மாறிய அரசியல்வாதிகள் குறித்து தனியான விசாரணை நடத்த வேண்டுமென குறிப்பிட்டார்.அதை ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் .