உலகம்

கத்துவா சிறுமி படுகொலை – ஆறு பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

ஜம்மு, காஷ்மீரில் 8 வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆறு பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த சிறுமி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே நிறைவடைந்திருந்த நிலையில், பாந்தன்கோட் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.

இந்த கொடூரமான கொலை நாடு முழுவதும் கடும் போராட்டத்தை தூண்டியது.

இந்த வழக்கில் 8 பேர் வழக்கில் கைதாகினர். அவர்களில் ஒருவர் சிறுவர் என்பதால் அவருக்கு தனி வழக்கு விசாரணை நடத்தப்படும்.

மற்றுமொருவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை அல்லது அதிகமாக மரண தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.