Breaking News

கதிர்காம உற்சவம் ஜூலை 21 இல் ஆரம்பம் !

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை ஜுலை 21ம் திகதி முதல் ஒகஸ்ட் 4ம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் முருகன் ஆலய உற்சவத்திற்கான அழைப்பை ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்விடம் இன்று கையளித்தார்.

📌. ஒகஸ்ட் 3ம் திகதி வருடாந்த உற்சவம் நடத்தப்படவுள்ளது.

📌. ஒகஸ்ட் 4ம் திகதி தீர்த்தோற்சவம் நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் கொவிட்−19 வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தல் காணப்படுகின்ற பின்னணியில், பெரஹராவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க ஏற்பாட்டு குழு தீர்மானித்துள்ளது.

ஏனைய உற்சவங்கள் சுகாதார நடைமுறையின் கீழ் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.