இலங்கை

கண்டி வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கண்டி வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்று காலத்தில் தமது உயிர்களை பணயம் வைத்து கடமையாற்றிய தமக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்குவிப்பு தொகை வழங்கப்படவில்லை என பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டி பொது வைத்தியசாலையின் சகல தாதியர்களும் தமது பணிகளை புறக்கணித்து வீதிக்கு வந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை ‘சுவ விருவன்’ என்ற பெயரும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்படும் சலுகைகளும் தமக்கு அவசியம் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாறாக உயிரை பணயம் வைத்து மேற்கொண்ட பணிக்கு தகுந்த பிரதிபலனே அவசியம் என தாதியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.