இலங்கை

கண்டியில் நேற்று நடந்த முக்கிய சந்திப்பு – பிடிகொடுக்காமல் நழுவினார் மைத்ரி !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம – சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று கண்டியில் நடந்த சந்திப்பொன்றில் முக்கிய பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கு மல்வத்து மாநாயக்க பீடத்தால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள கண்டிக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிக்கு மதிய உணவு அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் கண்டி இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில் பிரதமர் ரணில் மற்றும் சஜித் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து அங்கு கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் சற்று இறுக்கமான போக்கை ஜனாதிபதி கடைப்பிடிப்பது அவரின் கருத்துக்களில் வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது.

முதலில் ஜனாதிபதி தேர்தல் வருமா என்பது குறித்து ஜனாதிபதியிடம் அறிய ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள் முயன்றபோதும் அதற்கு மைத்திரியிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லையென தெரிகிறது.