Breaking News

கண்டியில் நாளை கடைகள் பூட்டு – சிங்கள வர்த்தகர் சங்கம் அறிவிப்பு !

 

அத்துரலியே ரத்தன தேரருக்கு ஆதரவை வழங்கும் வகையில் நாளை கண்டியில் அனைத்து கடைகளும் பூட்டப்படுமென கண்டி சிங்கள வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை காலை 9 மணிக்கு சிங்கள வர்த்தக சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ரத்தன தேரரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.