உலகம்

கண்காணிப்பு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதி செய்தது அமெரிக்கா.

 

அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் ஒன்று ஈரானில் புரட்சி இராணுவ படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர்.

இதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானிய வான்பரப்பில் அத்துமீறி பிரவேசித்ததால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் படையினர் அறிவித்திருந்தனர்.

எனினும் இதனை நிராகரித்துள்ள அமெரிக்கா, குறித்த விமானம் சர்வதேச கடல்பரப்புக்கு மேலாக பறந்த வேளையில் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்த செயலை அமெரிக்கா கண்டிக்கவும் செய்துள்ளது.