இலங்கை

கணினி வலையமைப்பை முடக்கி 50 லட்ச ரூபா லஞ்சம் கேட்ட இருவர் திருகோணமலையில் கைது !

கணினி வலையமைப்பை முடக்கி 50 லட்ச ரூபா லஞ்சம் கேட்ட இருவர் திருகோணமலையில் கைது !

கணனி மென்பொருள் நிறுவனம் ஒன்றின் கணனி வலையமைப்பை ஹெக் செய்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரையும் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய அவரது சகோதரர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணனி தொழிநுட்பத்தில் திறமைவாய்ந்த இந்த மாணவரின் சகோதரர் நிறுவன கணனி வலையமைப்பின் இரகசிய கடவுச்சொல்லை பகிர்ந்துள்ளார்.

அதனையடுத்து நிறுவன கணனி வலையமைப்பை ஐந்து மணி நேரமாக முடக்கி வைத்த இந்த மாணவர் மீண்டும் கணனி வலையமைப்பை செயற்படுத்த 50 லட்சம் ரூபாவை நிறுவனத்திடம் லஞ்சமாக கோரியுள்ளார்.

இதனையடுத்து நிறுவனம் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரித்த பொலிஸ் சம்பந்தப்பட்ட மாணவரையும் அவரது சகோதரரையும் கைது செய்துள்ளது.

இந்த நடவடிக்கையால் சுமார் 2 கோடி ரூபா நட்டம் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயர்தர வகுப்பில் தகவல் தொழிநுட்ப பாடத்தில் அதிசித்தி பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதலிடத்தில் வந்து பல்கலைக்கழகம் சென்ற மாணவரே தனது மடிக்கணினி மூலம் இதனை செய்துள்ளார்.