இலங்கை

‘கட்சியுடன் பேசி முடிவெடுப்பேன் ‘ – ரிஷார்த்திடம் சொன்னார் சம்பந்தன்

” நான் இப்போது திருகோணமலையில் தங்கியுள்ளேன் .கொழும்பு வந்ததும் கட்சியுடன் பேசவுள்ளேன் .பின்னர் ஒரு தீர்மானத்தை எடுப்போம் ”

இவ்வாறு அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

தமக்கெதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று தொலைபேசியின் ஊடாக சம்பந்தனுடன் பேசினார் அமைச்சர் ரிஷார்ட் . அப்போது இவ்வாறு குறிப்பிட்ட சம்பந்தன் மேலும் கூறியதாவது ,

” நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நானும் அறிந்தேன்.ஆனால் கட்சி உறுப்பினர்களுடன் இது பற்றி பேச வேண்டும்.அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்க வேண்டும்.அதன் பின்னர் ஒரு முடிவை எடுப்போம்.கொழும்பு வந்தவுடன் நான் உங்களுடன் பேசுகிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார் சம்பந்தன் எம் பி .

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்களின்படி – நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக – ரிஷார்ட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அக்கட்சி எடுக்குமென அறியமுடிந்தது.