Breaking News

கட்சித் தலைவர்கள் கூட்டம் விரைவில் – சபாநாயகர் அறிவிப்பு !

 

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களது கூட்டமொன்று விரைவில் நடைபெறுமென சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் ஏலவே பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தத்தமது கட்சிகளுடன் பேச்சு நடத்திய பின்னர் இந்த கட்சித் தலைவர்களது கூட்டம் நடைபெறும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.