உலகம்

கடும் மழை – இந்தியா, நேபாளம், பங்களாதேஸில் கடும் பாதிப்புகள்

பருவபெயர்ச்சி மழையால் வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் புயல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மழையால் நேபாளத்தில் குறைந்தது 67 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
30 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் 38 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பங்களாதேஷில் நெரிசலான ரோஹிங்கியா அகதிகள் முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்னும் மோசமான வானிலை எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் சீனா வழியாகப் பாயும் பிரம்மபுத்ரா நதி பெருக்கெடுத்துள்ளது.
இதனால் இந்தியாவின் வடகிழக்கு அசாம் மாநிலத்தில் 1,800 க்கும் மேற்பட்ட கிராமங்களை சதுப்பு நிலமாக்கியுள்ளன.
அதிகரித்து வரும் வெள்ள நீர் காரணமாக வட இந்திய மாநிலமான பீகாரில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அசாமில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கடந்த வாரத்தில் பங்களாதேஷில் குறைந்தது 29 பேர் உயிரிழந்தனர்.
இதில் 18 பேர் மின்னல் தாக்கத்துக்கு ஆளாகி உயிரிழந்தவர்களாவர்.