இலங்கை

கடவுச்சீட்டை தவறவிட்ட தசுன் சானக்க- மே.இந்திய தீவுகளுக்கு பறப்பதில் சிக்கல்

மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியினருடன் தசுன் சானக்கவுக்கு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டை தவறவிட்டதன் காரணமாக அவரால் விசா அனுமதிப்பத்திரத்தை பெறமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விசா சிக்கலை தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், விசா சிக்கலை நிவர்த்தி செய்தவுடன் தசுன் சானக்க விரைவில் இலங்கை அணியுடன் இணைவார் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.