Breaking News

கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் சென்ற மட்டக்களப்பு மாணவன் !

 

மட்டக்களப்பு களுதாவளையில் கடற்கரையில் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

இன்று மாலை 4.30 அளவில் தனது நண்பர்கள் 4 பேருடன் சுந்தரலிங்கம் டிலாஞ்சன் எனும் மாணவன் கடலில் நீராடச் சென்ற போது கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இன்னும் அவருடைய உடல் கிடைக்கவில்லை.களுவாஞ்சிக்குடி பொலிசார் இதுகுறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..