Breaking News

கடமையை சரிவரச் செய்யாதோர் மீது நடவடிக்கை – பொலிஸை பணித்தது சட்ட மா அதிபர் திணைக்களம் !

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு தமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் 3 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் அடங்கலாக 9 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அரச புலனாய்வுத் துறை தலைவர் நிலந்த , விசேட அதிரடிப்படையின் லத்தீப் ஆகியோர் ,எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.