Breaking News

கஞ்சிப்பான இம்ரானின் தந்தை மீது வாள்வெட்டு – படுகாயம் !

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானின் தந்தை மாளிகாவத்தை பகுதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்கானார் . இன்றிரவு இந்த சம்பவம் நடந்தது.

ஓட்டோ ஒன்றில் வந்தவர்கள் இந்த வாள்வெட்டை நடத்தியுள்ளனர். படுகாயங்களுடன் அவர் தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஓட்டோவில் வந்த நால்வர் இந்த வாள்வெட்டை நடத்திவிட்டு தப்பிச் செல்கையில் மருதானை கலர் லைட் அருகே பொலிஸாரின் சோதனைக்கு இலக்காகினர். அப்போது அவர்களில் மூவர் தப்பிச் சென்றனர்.ஒருவர் ஓட்டோவுடன் கைது செய்யப்பட்டார்.