விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் கிறிஸ் கெய்ல்

 

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான தொடருடன்; சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் முன்னதாக, தற்போது நடைபெறுகின்ற உலககிண்ண தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டிருந்தது.

எனினும் தமது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ள அவர் இந்திய அணிக்கு எதிராக இந்த வருடம் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெறுகின்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி ஜமேக்காவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் அவரது இறுதி ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.