விளையாட்டு

ஓய்வு பெற்றார் யுவராஜ்

 

இந்திய கிரிக்கட் வீரர் யுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் பங்குபற்றிய அவர், 2017ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய ஒருநாள் அணியில் பங்கேற்கவில்லை.

2007ம் ஆண்டு 20க்கு20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியும் அவர் அங்கம் வகித்திருந்தார்.

தற்போது 37 வயதாகும் அவர், 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 8701 ஓட்டங்களைப் பெற்றிருப்பதுடன், 40 டெஸ்ட் போட்டிகளில் 1900 ஓட்டங்களையும், 58- 20க்கு20 போட்டிகளில் 1177 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.