விளையாட்டு

ஓய்வு பெற்றார் அம்லா

ஓய்வு பெற்றார் அம்லா

தென்னாபிரிக்க வீரர் அம்லா சர்வதேச கிரிக்கெட்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
தென்னாபிரிக்க வீரர் அம்லா, 36. கடந்த 2004ல் இந்தியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் அறிமுக வாய்ப்பு பெற்றார். தனது 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் 124 டெஸ்ட் (9282 ரன்), 181 ஒரு நாள் (8113), 44 ‘டுவென்டி–20’ (1277) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

டெஸ்ட் அரங்கில் முச்சதம் அடித்த ஒரே தென் ஆப்ரிக்க வீரர். சமீபத்திய, உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா லீக் சுற்றுடன் திரும்பியது. இதில் ஆம்லா 7 போட்டியில் 203 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அம்லா வெளியிட்ட அறிக்கையில்,‘எனது நீண்ட கால கிரிக்கெட் வாழ்வில், பல பாடங்களை கற்றுக்கொண்டேன். தற்போது ஓய்வு பெறுகிறேன். இதுவரை ஆதரவு தந்த சக வீரர்கள், பயிற்சியாளர் குழுவினருக்கு நன்றி. மகிழ்ச்சியான தருணம், கடினமான சூழ்நிலை என இரண்டிலும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி,’ என, தெரிவித்துள்ளார்.