இலங்கை

ஓமான் அமைச்சர் றூஹ்மி – ரணிலுடன் முக்கிய பேச்சு

இலங்கை வந்த ஓமான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹம்மட் அல் றூஹ்மி நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினார்.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அமைப்புப் பணிகளில் ஓமான் முதலிடுவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

முன்னதாக இலங்கையில் முதலீடு செய்வது குறித்து மறுப்பை வெளியிட்டிருந்த ஓமான் அரசு இப்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து இறங்கியுள்ளதாக தகவல்..

தமிழக அரசியல் பிரமுகர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது.