இலங்கை

ஓட்டோ விபத்தில் சாரதி படுகாயம் !

ஹட்டன் கொழும்பு வீதியில் இன்று காலை ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

தலவாக்கலையில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற ஓட்டோவே ஹட்டன் கொழும்பு வீதியின் ஸ்ட்ரெதன் தோட்டத்திற்கருகே விபத்துக்குள்ளானது.

பெருநாள் விடுமுறையில் தனது இல்லத்தை நோக்கி சென்ற ஒருவரே வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.