இலங்கை

ஓட்டோ பள்ளத்தில் பாய்ந்து விபத்து – சாரதி படுகாயம் !

அதிகவேகமாக சென்ற முச்சக்கரவண்டியொன்று 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அட்டனில் இருந்து டிக்கோயா ஒஸ்போன் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி -அட்டன் பொகவந்தலா பிரதான வீதியின்அளுத்கால பகுதியில் இன்று பகல் 1 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது

அதிகவேகத்தினால் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பாதையிலிருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் சிறு குழந்தை உட்பட மூவர் பயணித்துள்ள போதிலும் தெய்வாதீனமாக யாருக்கும் பாதிப்புகள் இல்லையென்றும் முச்சக்கரவண்டி சாதியே கடும் காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர் .

( நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் – கிருஷ்ணா )