Breaking News

ஒலுவிலில் அப்துல்லா மஃறூப் எம் பியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களினால் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் இத்தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்

நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எமது கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்.இதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமின் நெருங்கிய நபர் ஒருவரும் எம்முடன் இணைந்து இரவு இராபோசனமும் வழங்கினார்.இந்த விடயத்தை என்னிடம் செவ்வி மேற்கொண்ட ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தேன்.அது நேரலையாகவே இருந்தது.இதனை பார்த்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் நான் தங்கி நின்ற துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான தங்குமிடத்திற்கு வந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
எனது வாகனத்தையும் கற்களால் அடித்த கண்ணாடிகளை நொறுக்கினர் .இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளேன் – என கூறினார்

 

செய்தியாளர் – பாரூக் ஷிஹான்