விளையாட்டு

ஒரே நேரத்தில் இரு போட்டிகள் – பட்லர் யோசனை

 

இங்கிலாந்து கிரிக்கெட் சபை, ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு அணிகளை களமிறக்க முடியுமென, ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அனைத்து தொழில்முறை கிரிக்கெட போட்டிகளும் குறைந்தது மே 28 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில். டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் என இரு அணிகள் ஒரே நேரத்தில் விளையாடுவதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தர்க்க ரீதியாக சாத்தியமானால், இரசிகர்களை கவர முடியுமென அவர் கூறியுள்ளார்.
“மக்கள் எந்த விளையாட்டையும் தற்போதைய சூழ்நிலையில் இரசிப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், அவர்களும் வர விரும்புவார்கள். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.