Breaking News

”ஒரு மாதத்திற்குள் தீர்வு” – ஞானசார தேரர் கல்முனையில் உறுதிமொழி ! போராட்டம் கைவிடப்பட்டது

 

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான விடயத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக கலபொடஅத்தே ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதையடுத்து கல்முனையில் ஆறு தினங்களாக நடந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது..

இன்று காலை கல்முனைக்கு சென்ற ஞானசார தேரர் அங்கு உண்ணாவிரதம் இருந்தவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.பின்னர் உரிய தரப்புடன் பேசி ஒரு மாத காலத்தில் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக உறுதிமொழியை வழங்கினார் ஞானசார தேரர்.இதனையடுத்து உண்ணாவிரதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இங்கு பேசிய ஞானசார தேரர் கூறியதாவது ,

உண்ணாவிரத இந்த போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம்.அரசியல்வாதிகளின் இருவேடங்களை களைந்து நாம் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் நாம் செயற்படுவோம். ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் செயற்படவேண்டும்.விரைவில் இந்த பிரச்சினையை முடித்து பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன்.அந்த செய்தி மிக விரைவில் உங்களுக்கு கிடைக்கும் ”

என்றார் ஞானசார தேரர் .

 

இதேவேளை போராட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் ,ஐவர் நீர் ஆகாரம் மட்டும் எடுக்க ஒப்புக்கொண்டு ஒருவரது போராட்டம் தொடர்வதாகவும் சற்று முன்னர் சொல்லப்பட்டது.