Breaking News

ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு

நாட்டில் வரலாறு காணாதளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் 24 கரட் கொண்ட ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 22 கரட் கொண்ட ஒரு பவுண் தங்ஙத்தின் விலை 88 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலக பொளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையே தங்கத்தின் விலை உயர்வடைந்தமைக்கான காரணம் என பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1800 டொலர்களாக உயர்வடைந்தமையினாலேயே தேசிய சந்தையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வ​டைந்துள்ளது.

கடந்த 14 மாதங்களில் தங்கத்தின் விலை 40 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விலை அதிகரிப்பானது இலங்கையில் நகைக் கடை வர்த்தகர்களின் வியாபாரத்தில் பெரிதும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.