இலங்கை

ஒரு இலட்சத்திற்கும் அதிக PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

நாட்டில் 171,169 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 680 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,844 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் மூவர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இருவரும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதனடிப்படையில் இன்று (10) காலை வரை கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையங்களில் 606 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் 485 பேர் குறித்த நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதுடன், 67 நிர்வாகத்தினரும் பேரும் 48 குடும்ப உறுப்பினர்கள் இதில் அடங்குவதாக தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சென்னையிலிருந்து 36 சிவில் உறுப்பினர்கள் இன்று காலை நாடு திரும்பியதுடன் டோஹா கத்தாரிலிருந்து 28 பேரும் ஜப்பானிலிருந்து 148 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்குட்படுத்தி கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 14 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 29,729 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

முப்படையினரால் நிர்வாகிக்கப்படும் 36 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3,025 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்ட வருகின்றனர்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட மூவர் குணமடைந்து இன்று காலை வீடு திரும்பியுள்ளனர்.