உலகம்

ஒரு இரவை தீவிர சிகிச்சைப் பிரிவில் கழித்த பொரிஸ் ஜோன்சன்  

பிரித்தானிய பிரதமர்  பொரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் அறிகுறிகள் மோசமடைந்ததை அடுத்து மத்திய லண்டன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

55 வயதான  ஜோன்சன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக,  வெளிவிவகார செயலாளர் டொமினிக் ராப் கூறியுள்ளார்.
பிரித்தானிய பிரதமரின், கடமைகளை நிறைவேற்றிவரும் அவர்,  அரசாங்கத்தின் நாளாந்த கூட்டத்திற்கும் தலைமை தாங்கி வருகின்றார்.
இந்நிலையில். அமைச்சரவை அலுவலக அமைச்சர், மைக்கேல் கோவ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பொரிஸ் ஜோன்சன் ஞாயிற்றுக்கிழமை செயின்ட் தோமஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.