இலங்கை

ஒருவரின் விடுதலைக்காக அமைச்சர் றிஷார்த் மூன்று தடவைகள் அழைப்பெடுத்தார் – இராணுவத் தளபதி தெரிவிப்பு !

“ ஒருவரின் விடுதலைக்காக  மூன்று தடவைகள் அழைப்பெடுத்தார். கைது செய்யப்பட்ட ஒருவரை விடுதலை செய்யுமாறு அவர் கோரினார். ஒன்றரை வருடம் கழித்து என்னுடன் பேசுமாறு நான் கூறினேன்”

இவ்வாறு குறிப்பிட்டார் இராணுவத் தளபதி லெப்னினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இப்படி தெரிவித்தார்.

அமைச்சர் ரிசார்த் பதியுதீன் உங்களுடன் பேசி ஒருவரை விடுதலை செய்ய கேட்டாரென கூறியுள்ளீர்கள்.. அது வேண்டுகோளா அழுத்தமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கி இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது ,

அது அழுத்தமா வேண்டுகோளா என்பதை பார்த்தால் என்னிடம் விடுத்த வேண்டுகோளாகவே அதனை பார்க்கலாம்.தெஹிவளையில் கைது செய்யப்பட்ட ஒருவரின் விடுதலை சம்பந்தமானது .அது யார் எவர் என்ன செய்யலாம் என்று அவர் மூன்று தடவைகள் பேசினாலும் மூன்றாவது தடவை பேசும்போது – என்னுடன் ஒன்றரை வருடங்கள் கழித்து பேசுமாறு நான் கூறிவிட்டேன்.ஏனெனில் கைது செய்யப்பட்டவரை ஒன்றரை வருட காலம் வரை சிறையில் வைக்க சட்டத்தில் எனக்கு இடமுண்டு..

என்றார் இராணுவத்தளபதி