விளையாட்டு

ஒசாகாவை விமர்சித்த ஜோடிக்கு எச்சரிக்கை

 

நேரடி நிகழ்ச்சி ஒன்றின்போது, அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடர் சாம்பியன் நவோமி ஒசாகாவுக்கு “கொஞ்சம் வெளிர் நிறம் தேவை” எனக் கூறியமைத் தொடர்பில், ஜப்பானிய நகைச்சுவை ஜோடி மன்னிப்பு கோரியுள்ளது.

ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை, ஒசாகா கடந்த 21ஆம் திகதி, தனது சொந்த ஊரான ஒசாகாவில் தனது முதல் ‘பான் பசிபிக்’ பகிரங்கப் பட்டத்தை வென்றார்.

‘எ மெஸோ’ என்று அழைக்கப்படும் குறித்த நகைச்சுவை ஜோடிஇ ‘ஒசாகா மிகவும் வெயிலில் வாடுகிறார்” என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்களைத் தொடர்ந்து வட்டனபே என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம், குறித்த ஜோடிக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளரான ஒசாகாவை பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்றாலும், இரு நகைச்சுவையாளர்களும் பொருத்தமற்றஇ புண்படுத்தும் கருத்துக்களை கூறியதற்காக மன்னிப்புக் கோரியுள்ளனர்.

குறிப்பிட்ட நபருக்கு அளெகரியத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கோருவதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.